மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

 கிராமவாசியை "பளார்" என அறைந்த உபி அமைச்சர்

அகிலேஷ்யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியைச்சேர்ந்த பொதுப்பணித்துறை அமைச்சர் சுரேந்தர் சிங்

News image
Updated On :30 டிசம்பர் 2013, 9:27 am

வேல்முருகன்

அகிலேஷ்யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியைச்சேர்ந்த பொதுப்பணித்துறை அமைச்சர் சுரேந்தர் சிங் வாராணாசி அருகே உள்ள கிராமத்தில் நடந்த அரசு விழாவில் நேற்று கலந்து கொண்டார்.

அப்போது கூட்டத்தில் உள்ள மக்களிடையே நின்று இருந்த அவர், கிராமவாசி ஒருவரை திடீரென கன்னத்தில் பளார் என அறைந்தார். இது அருகே இருந்த ஒருவரின் கேமராவில் பதிவாகியுள்ளது. அவர் ஏன் கிராமவாசியை அறைந்தார் என்பது குறித்து தெரியவில்லை.

அமைச்சர் ஒருவர் பொது இடத்தில் பொதுமக்கள் ஒருவரை அறைந்த சம்பவம் உ.பி.யில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.